பாகிஸ்தானில் வெடிகுண்டு சம்பவம்: 8 பேர் பலி

உலகம்

இஸ்லாமாபாத், மே 8: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரத்தில் உள்ள சூபி புனித தலம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் நோன்பு துவங்கியுள்ள நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா? என்பதை இப்போதே உறுதி செய்ய முடியாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.