பொறியியல் படிப்பு:இதுவரை 62,800 பேர் பதிவு செய்துள்ளனர்

சென்னை

சென்னை, மே 8:தொழில் நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ/பி.டெக் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இது வரை 62,800 மாணாக்கர்கள் சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர்.

இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ/பி.டெக் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இது வரை 62,800 மாணாக்கர்கள் சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர்.

இணையதள கலந்தாய்வு பணி ஏற்பாடுகளை, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மற்றும் தேசிய தகவல் மையம் ஆகிய அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடனும், பல்வேறு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் குழுவின் அறிவுரைப்படியும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்பப்பாடம் மற்றும் கல்லூரி தேர்வு ஆகிய அனைத்து நேர்வுகளுக்கும், மாணாக்கர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஸ்கிரீன் ஷாட் மூலமாக வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.90 இலட்சம் மாணாக்கர்கள் இணைதளத்தை பார்வையிட்டு, நன்கு புரிந்துக் கொண்டு எந்தவித சந்தேகமுமின்றி தொடர்ந்து தங்களது பதிவுகளை முழுமையாக செய்து வருகின்றனர்.