பிலானி, மே 8: ராஜஸ்தானில் எம்டெக் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவரை ஏப்ரல் 22-ந் தேதியில் இருந்து காணவில்லை. அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என மடிப்பாக்கத் தில் வசித்து வரும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த திருமாவளவன் (வயது 60) என்பவரின் மகன் ஹேமானந்த் (வயது 23). இவர் ராஜஸ்தானில் பிலானி என்ற இடத்தில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரியில் எம்.டெக். படித்து வந்தார். இன்னும் 2 மாதத்தில் படிப்பு முடிவடைந்து பணியில் சேருவதாக இருந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 22-ந் தேதி யில் இருந்து ஹேமானந்தை காண வில்லை என பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் தனது  செல்போன், ஏடிஎம் மற்றும் ஐடி கார்டுகள் கொண்ட வாலட்டை தனது விடுதி அறையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். விடுதி வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளிலும் அவர் வெளியேறிய காட்சிகள் எதுவும் இல்லை.

ஹேமானந்த் மாயமானது குறித்து விடுதி நிர்வாகம் ஏப்ரல் 23-ந் தேதி தகவல் வெளியிட்டது. உள்ளூர் போலீசில் மறுநாள் புகார் செய்யப் பட்டது. மகன் காணாமல் போன செய்தி கிடைத்ததும் மடிப்பாக்கத் தில் இருந்து திருமாவளவன் பிலானி சென்றுள்ளார். ஒவ்வொரு நாளும் மகனின் அடையாள அட்டையை காட்டி ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஹேமானந்தின் தம்பி விவேக் ஆனந்த் கூறுகையில், எனது தந்தை பிலானியில் எனது சகோதரரை கண்டுபிடிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்ற உறுதியில் இருக் கிறார். செல்போன் அழைப்புகளையும் ஏற்று பேச மறுக்கிறார். எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம் என்றார்.

இதனிடையே தேர்தல் பணிகள் காரணமாக ஹேமானந்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட தங்களுக்கு போதிய நேரமில்லை என்று பிலானி போலீசார் கூறியதாக வெளியாக செய்திக்கு அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மறுப்பு தெரி வித்துள்ளார். தேர்தல் பணியில் நாங்கள் சுறுசுறுப்பாக இருந்த போதிலும் இதுபோன்ற விவகாரங் களில் கவனம் செலுத்த போதிய ஆள்பலம் எங்களிடம் உள்ளது என்றார்.

ஹேமானந்தை தேடி கண்டுபிடிக்க எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப கல்லூரி யின் பதிவாளர் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் மேற்கொண்டு
விசாரணை நடத்துவதற்காக ராஜஸ்தான் போலீஸ் குழுவினர் சென்னை வர உள்ளனர்.