தொடர் வெற்றியின் ரகசியத்தை சொன்ன ரோஹித் சர்மா

விளையாட்டு

சென்னை, மே 8: சென்னை-மும்பை அணிகள் இடையேயான முதல் பிளே-ஆஃப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. மும்பையின் சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், பைனலுக்குள் நுழைந்துவிட்டதை நினைத்தால், மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. மிகப்பெரிய அணியை வீழ்த்தி பைனலுக்குள் நுழைவது பெரும் நம்பிக்கை தரும். எங்களிடம் எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆட கூடியவர்கள் இல்லை. பிட்ச்சின் தன்மை உணர்ந்து, அதற்கேற்றாற்போல தங்களை தகவமைத்து கொண்டு, சரியான நேரத்தில் நிதானத்துடன் ஆட கூடிய வீரர்களை கொண்டுள்ளதே தொடர் வெற்றியின் ரகசியம் என்று அவர் கூறினார்.