சென்னை, மே 8: தேனாம்பேட்டை, ராமலிங்கேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). தச்சுத்தொழிலாளியான இவருக்கு, செல்வி (வயது 40) என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த பாலகிருஷ்ணன் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், குடும்பத் தகராறு காரணமாகவே பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.