சென்னை, மே 8: அயனாவரம் புதுத் தெருவை  சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 65). ஓய்வுப் பெற்ற அரசுஊழியரான இவர், அயனாவரம் என்.எம்.கே. தெருவில் உள்ள எண்ணெய் கடைக்கு இன்று காலை சமையல் எண்ணெய் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

எண்ணெய் வாங்கிவிட்டு திரும்பும்போது, அந்த கடை முன் தோண்டப்பட்டிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் கால் இடறி விழுந்து மதுசூதனன் உயிரிழந்தார்.
இது குறித்து, அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடை உரிமையாளர் அருண்குமாரிடம் (வயது 56) விசாரணை நடத்திவருகின்றனர்.