சிட்னி, மே 9: இளம் பெண்கள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, இந்திய ‘யோகா குரு’ ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றின் மடாதிபதியாக இருப்பவர் ஆனந்த் கிரி (வயது 38). மேலும் இவர், ஆன்மீக வகுப்புகளையும் யோகா பயிற்சியையும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கு ஆன்மிகம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வந்துள்ளார். அவர் மீது இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் ஆஸ்திரேலியா சென்ற போது, நியூ சவுத் வேல்ஸ் நகரின் புறநகர் பகுதியான ரூட்டின் ஹில் என்னும் இடத்தில் 29 வயது தென்னிந்திய பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் அவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.