டோக்கியோ, மே 9: ஜப்பானில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மழலையர் பள்ளி சிறார்கள் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஜப்பான் நாட்டின் ஷிகாவில் மழலையர் பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர், மாணவர்களை சாலையோரமாக நடைபாதையில் பள்ளிக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தபோது,

சாலையில் வந்து கொண்டிருந்த கார் தறிகெட்டு ஓடி சிறார்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில், ஆசிரியர்களும் மாணவர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. இந்த விபத்துக்கு காரணமான 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.