ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

12-வது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது இறுதிப்போட்டிக்கான தகுச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் சென்னையை மும்பை தோற்கடித்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளன. இறுதிப்போட்டி ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.