திருத்தணி, மே 9: கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய மருமகளையும், அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கட்டிலில் படுத்திருந்த முதியவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்திய இரு பெண்களை போலீசர் கைது செய்தனர். திருவாலங்காடு அடுத்த நெமிலி காலனியில் வசிப்பவர் கோபால் மகன் சபாபதி(65) நேற்று முன்தினம் காலையில் வீட்டின் முன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த அவர் உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி சத்தம் போட்டர்.

அக்கம் பக்கத்தினர் வந்து பலத்த தீ காயத்துடன் சபாபதியை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து போனர்.  மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போது எழும்பூர் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் 14ன் நீதிபதி ரோஸ்லின்துரையிடம் அவர் வாக்கு மூலம் அளித்தர்.

மகன் பிரபாகரனுக்கும் சென்னை மாதாவரத்தை சேர்ந்த காயத்திரி(34) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து பரத் (2) என்ற மகன் உள்ள நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே காயத்திரி மகனை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றர். அவர் குடும்பம் நடத்த வராததால் சென்னையை சேர்ந்த வேறு பெண் அவர் பெயரும் காயத்திரி(30) கடந்த மாதம் 11ந் தேதி இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தேன் இதனால் ஆத்திரமடைந்த என்னுடைய மாஜிமருமகள் காயத்திரி அவரது தாய் கலைவாணி(57) ஆகிய இருவரும் தூங்கி கொண்டிருந்த என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றனர்.

என தனது வாக்கு மூலத்தில் கூறியிருந்தர். இதன் அடிப்படையில் கனகம்மாசத்திரம் போலீசர் வழக்கு பதிவு செய்து காயத்திரி கலைவாணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.