சென்னை, மே 9: சேலம் அருகே ஓடும் ரயில் களில் பெண்களிடம் நகைகளை பறித்தது தொடர்பான வழக்கில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரின் புகைப்படங்களை ரயில்வே  போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவலிப்பாளையம் என்ற இடத்தில் ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியே இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் மெதுவாக சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு இந்த வழியாக மெதுவாக சென்ற ரயில்களில் ஒரு கும்பல் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் தங்க நகைகளை பறித்துக்கொண்டு பாதுக்காப்புக்கு இருந்த போலீசார் மீது கல் வீசிவிட்டு தப்பி சென்றது.

இந்த கொள்ளையர்களை பிடிக்க தமிழக ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் ரெயில்வே டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே எஸ்.பி. ரோஹித் நாதன் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் கொண்ட 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார், சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர். மாவலிப்பாளையத்தை சுற்றி யுள்ள இடங்களில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து விபரங்களை சேகரித்தும், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வட மாநிலக்கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே இது போன்ற வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய வட மாநில கும்பலான ஷாம்ளி என்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர் களின் புகைப்படங்களை வெளியிட்ட ரெயில்வே போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும், அவர்களின் புகைப் படங்கள் அனைத்து ரெயில்வே காவலர்களுக்கும், காவல் நிலையங் களுக்கும் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கொள்ளையர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாம்ளி என்ற இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த வர்கள் ரெயில் நிலைய நடைபாதை களிலேயே தங்கியிருப்பார்கள். முன்பதிவு ரெயில் பெட்டிகளில் பயணம் செய்வர்.

பாத்ரூம் அருகிலேயே தங்கிக்கொள்வர். சில சமயங்களில் பாத்ரூமுக்கு உள்ளேயும் இருந்துகொள்வர். ஒவ்வொருவரிட மும் மொபைல் போன் இருக்கும்.
கதவுகளுக்கு அருகே பயணம் செய்யும் பயணிகளிடம் கொள்ளை யடித்துவிட்டு தப்பிச்சென்று விடுவார் கள். இதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீஸ் கீழ்க்கண்ட வைகளை அறிவித்துள்ளது.

ரெயில்களில் பயணம் செய்வோர் குறிப்பாக பெண்கள் ஜன்னல் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. இருக்கையை தேடி யாராவது ஆவேசமாக சுற்றித்திரிந்தால் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு உரியவரை டிடிஇ உடனடியாக பிடித்து விசாரணை நடத்த வேண்டும்.

இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை வுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். ரெயில் ஓடிக்கொண்டிருக்கும் போது சந்தேகப்படும் நபர்கள் ஏறுவதை தடுக்க வேண்டும்.