சென்னை, மே 9: மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்  சார்பில் சென்னையில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை கௌரவிப்பதற் காக நேற்று 8-ந் தேதி சென்னையில் செவிலியர் தினம் கொண்டாடப் பட்டது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் வளாகத்தில் உள்ள சச்சாரியா மார் டயோனிசியஸ் ஆடிட்டோரியத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை யாரின் நினைவாக சர்வதேச  செவிலியர் தினம் மே 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அனை வருக்கும் ஆரோக்கியம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செவிலியர்களை பாராட்டும் விதத் தில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாநகர் சரக காவல்துறை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அவர் தனது உரையில் சர்வதேச அளவில் செவிலியரின் உழைப்பு பாராட்டத்தக்கது.

சமுதாயத்தில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறை செவிலியர்களின் கண்காணிப்பில் உள்ளது. அவர்களது தன்னலமற்ற சேவையினால் நோயாளிகள் குணமடைகின்றனர். பொதுமக்களின் ஆரோக்கியத்தில் செவிலியருக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார்.

ஓஜாஸ் ஆர்த்தோ அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி.ஆர்.அஸ்வின் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் முதன்மை நர்சிங் அலுவலர் ரஞ்சிதம் அண்டர்சன் வரவேற்புரையாற்றினார்.

மிஷனின் செயலாளர் டாக்டர் கே.ஜேக்கப் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மிஷனின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் செரியன், இதயநோய் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜன், மூத்த ஆலோசகர் டாக்டர் கே.லட்சுமணதாஸ் ஆகியோர் செவிலியரின் தியாகத்தையும், அவர்களது தன்னலமற்ற சேவை யையும் விளக்கி கூறினர். நிகழ்ச்சி முடிவில் செவிலியர் துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆரோக்கிய ஜெய தீபா நன்றியுரையாற்றினார்.