தொழிற்பழகுநர் தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு

சென்னை

சென்னை, மே 9: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசு வழங்கும் தேசிய தொழில்பழகுநர் சான்றிதழ் பெரும் பொருட்டு அரசு/தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழில் பிரிவில் பயின்று தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள் இதே தொழில் பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழில்பழகுநர் தொழில் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றது.

தொழிற்பழகுனர் சட்டம் 1961-ன் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சியை தொழிற் சாலைகளில் முடிக்காதவர்கள் இச் சட்டத்தின்படி தொழில் பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம் பெற்ற தொழில் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக பணியாற்ற லாம். இதற்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். மே 29, 30, 31, ஜூன் 11, 12, 13, 14 ஆகிய தேதி களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும். காலை 9.30 மணியள வில் தேர்வு தொடங்கும்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந் துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர்கள் ஆகியோரை தொடர்புகொண்டு பிற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.