திருச்சி, மே 9: கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதில், பல நாட்களாக இப்பிரிவு போலீசார் தேடி வந்த முக்கிய குற்றவாளியான திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள இளங்காகுறிச்சியை சேர்ந்த முகமது பரூக் (48) என்பவர் நேற்று அவரது வீட்டில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரி சிவகுமார் மற்றும் வையம்பட்டி தனிப்பிரிவு ஏட்டு பழனி உள்ளிட்ட போலீசார் இணைந்து முகமது பரூக் வீட்டில் திடீர் சோதனை செய்தபோது, அங்கிருந்த அவரை கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வையம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர், திருச்சி ஐ.ஜி.ஆபிசுக்கு அழைத்துச் சென்றனர்.