வேலூர், மே 9: விஐடியில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்கியது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஜல் புன்திர் என்ற மாணவருக்கு பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதற்கான முதல் ஆணையை விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் வழங்கி தொடங்கி வைத்தார்.

வி ஐ டி வேலூர் வளாகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், சிவில், பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் உட்பட 18 படிப்புகளும், வி ஐ டி சென்னை வளாகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.

பட்டப்படிப்புளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட் கத்தார் ஆகிய வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 163 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வில் 1இலட்சத்து 62 ஆயிரத்து 462 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

நுழைவுத்தேர்வு முடிவுகள் தீதீதீ.திடிt.ச்ஞி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பி.டெக் பட்டப்படிப்பு சேருவதற்கான கவுன்சலிங் ரேங்க் அடிப்படையில் வி ஐ டி வேலூர், சென்னை, போபால், அமராவதி வளாகங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது.

1 முதல் 10000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு இன்று ( 9-5-2019), 10001முதல் 30000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 10ம் தேதி,
30001முதல் 50000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 11ம் தேதி, 50001 முதல் 70000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 13ம் தேதி, 70001 முதல் 90000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 14 ம் தேதி, 90001 முதல் 110000 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 15-ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறுகிறது.

விஐடி வேலூரில் நடைபெற்ற கவுன்சலிங்கை விஐடி துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன் உத்திரப்பிரதேசத்தை  சேர்ந்த சஜல் புன்திர் என்ற மாணவருக்கு முதல் சேர்க்கை ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் வி ஐ டி துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன், வி ஐ டி நிர்வாக இயக்குநர் டாக்டர். சந்தியா பெண்ட்டரெட்டி, துணை வேந்தர் டாக்டர். ஆனந் ஆ.சாமுவேல், இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன், சேர்க்கை இயக்குநர் டாக்டர். கே.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.