ஸ்ரீந்கர், மே 10:ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி தரும் வகையில் திருப்பி சுட்டதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.