சென்னை, மே 10:தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணியில் தமாகா சேர்ந்து போட்டியிடுகிறது.
மக்களவை தேர்தலுக்கு பின்பு தமாகாவை பிஜேபியுடன் இணைக்க பேச்சு நடந்து வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், கே.எஸ். அழகிரி இந்த வேண்டுகோளை விடுத்
துள்ளார்.
தமாகா அனைவரும் தயக்கமின்றி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர வேண்டுமென்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.