ரூ.3 கோடி கடன் பாக்கி: விஷால் படத்திற்கு தடை

சினிமா

சென்னை, மே 10: ரூ.3 கோடி கடன் பாக்கி காரணமாக விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை தீர்க்க பிலிம் சேம்பர் நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல் அதர்வா நடிப்பில் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘100’ படம் கடன் பிரச்சனை காரணமாக இன்றும் வெளியாகவில்லை.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில், விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ படத்தை வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இதில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான மது தாகூர் ஏற்கனவே தயாரித்த ஸ்பைடர் படத்தில் ஏற்பட்ட ரூ.3 கோடி நஷ்டத்தை சம்மந்தப்பட்டவருக்கு தராததால் படத்தை வெளியிட தென்னிந்திய பிலிம்சேம்பர் தடை விதித்துள்ளது.

ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.36 கோடிக்கு விற்பனயைõகி உள்ளது. அதிலிருந்து ரூ.3 கோடியை தயாரிப்பாளருக்கு ஏன்? தரவில்லை என கேட்டு படத்திற்கு தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக விஷால் படம் இன்று வெளியாகவில்லை. அதேபோல் ஆரவ் சினிமாஸ் சார்பில் மகேஷ் தயாரிப்பில் அதர்வா நடித்துள்ள ‘100’ படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இந்த படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன் பதிவுகள் செய்யப்பட்டன.

இருப்பினும் திட்டமிட்டப்படி நேற்று படம் வெளியாகவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளரின் முந்தைய படங்களுக்காக வாங்கிய பணத்தை திருப்பி தராததால் படத்திற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. விடிய விடிய படத்தை வெளியிட சமரசப்பேச்சு வார்த்தை நடைபெற்றது. இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படாததால் இன்றும் படம் வெளியாகவில்லை.