சென்னை, மே 10: ஆவடி எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெளிமாநில ஊழியர்களிடம் கடந்த 7ம்தேதி கத்தி முனையில் செல்போன் மற்றும் பைக்குகளை திருடி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிறுவனத்தின் மேலாளர் கொடுத்து புகார் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருவேற்காடு பகுதியைச்சேர்ந்த மணிகண்டன் (வயது 19), ஜெய்சதீஷ் (வயது23) இருவரையும்கைது செய்து செல்போன்களை பறிமுதல்செய்தனர்.