திருச்சி, மே 10: இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லென்னோவா, ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் புவனேஷ்வர், எர்ணாக்குளம், ஜோத்பூர், மைசூர், டெல்லி, சண்டிகர் மற்றும் திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லென்னோவா மோட்ரோலா திறன் மேம்பாட்டு கழகம், 6900க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த, லெனோவா மோட்டோரோலா, மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான எடுப்ரிட்ஜ் உடன் இணைந்துள்ளது.
திருச்சியில் நடைபெற்ற துவக்க விழாவில் லென்னோவா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு நிர்வாகி பிரிஜாகிட்ட குல்கர்னி மற்றும் எடுப்ரிட்ஜ் வர்த்தக மேலாளர்அமித் ஆகியோர் பங்கேற்று பேசினர்.