சென்னை, மே 10:இந்தியில் தமிழ் இலக்கிய பணிக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரி துறைத்தலைவரும் உதவி பேராசிரியையுமான ந.லாவண்யா விருது பெற்றுள்ளார்.
இந்தி துறையில் 20ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேராசிரியை லாவண்யா மாலைச்சுடருக்கு அளித்த பேட்டியில், ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது இந்தியில் ஆர்வம் இல்லாமல் இருந்தது.

என் தாயின் ஊக்கமும், தன்னம்பிக்கையும் இதற்கு காரணம். சென்னை தி.நகரில் உள்ள பாஷா சங்கத்தில் தமிழ் மற்றும் இந்தி அறிஞரும் எனது குருவுமான முனைவர் கோவிந்தராஜனிடம் எம்ஏ படித்தேன். அதுவே என்னை வாழ வைக்கிறது. தமிழ் இலக்கியத்தில் உள்ள தனி ஆர்வத்தால் தமிழ் இலக்கியத்தின் பெருமையை வடநாட்டில் கொண்டு செல்வதே என் நோக்கம்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அரசு உதவி பேராசிரியை மற்றும் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறேன். இந்தி, தமிழ் இலக்கியப் பணிக்காக நான் ஆய்வு செய்த கட்டுரை படைப்புகள் மற்றும் ஆய்வுகள் என்றால், இந்தி மற்றும் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்’ கோதான் ஏக் பரிஷீலன், இந்தி உபன்யாசமே
சாமாதிகேத்னா, தமிழ் சாகித்யா ஏக் பரீட்சை, ஆலோச்சனா கே விவித் சந்தர்ப் பேன்ற 5 புத்தங்கள் எழுதி பிரசுரித்துள்ளேன்.

அதில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய நாவல்கள், கல்வி பற்றிய ஆய்வு கட்டுரை, தமிழ் சிற்றிலக்கியங்கள், தேசிய கவி ராம்தாரி சிங் திகைக்கர், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ள பெண்கள் பற்றிய கட்டுரைகள் இந்த புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

அலகாபாத் அருகே உள்ள ஜஸ்ரா பிராக்ராஜில் கான்கீநய் ஆவாஸ் பத்திரிகையும் சாஹித்ய சம்வர்தன் மஞ்ச் என்னும் இலக்கிய அமைப்பு, விக்ஞான் பரிஷத் அமைப்புகள் சார்பில் ஒருங்கிணைந்த தமிழ், இந்தி அறிஞர் முனைவர் கோவிந்தராஜன் பெயரால் ‘முனைவர் கோவிந்தராஜன் மொழிப்பால் விருது’எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது.

எனக்கு கிடைத்த முதல் விருது. அதுவும் என் குருவின் பெயரில் கிடைத்தது மறக்கமுடியாது. இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர்புக்கு: 9551 781 799.