முகலிவாக்கம் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத அகத்திய சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தினமும் காலை 8 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு விஷேச அபிஷேகம், அலங்காரம், இரவு 8 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது. 9-ம் தேதி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், 10-ம் தேதி ஞானவேல் ஆடு வாகனம், 11-ம் தேதி சூரசம்ஹாரம், 12-ம் தேதி நாராயண அலங்காரம், 13-ம் தேதி மயில் வாகன சேவை, 14-ம் தேதி யானை வாகன சேவை, 15-ம் தேதி ரத உற்சவம், 16-ம் தேதி குதிரை வாகனம், 17-ம் தேதி பல்லக்கு விமானம், 18-ம் தேதி மயில் வாகனம் ஆகியவை நடைபெறுகிறது.

மேலும் தினமும் பகல் 12 மணிக்கு அடியார்களுக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு கரகாட்டம், வான வேடிக்கை, பஜனை நடைபெறுகிறது. 20-ம் தேதி விடையாற்றி விழா நடைபெற உள்ளது.