ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் 3-வது தெருவில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர்- ஸ்ரீநாகாத்தம்மன் திருக்கோவிலில் கடந்த 8-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 8-ந் தேதி காலை பந்தக்கால், 9-ந் தேதி காலை அபிஷேக ஆராதனை, 10-ந் தேதி காலை பாலாபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதல் ஆகியவை நடைபெற்றது.

11-ந் தேதி இரவு 7.30 மணியளவில் முனீஸ்வரன் பூஜை, 12-ந் தேதி காலை 10 மணியளவில் அங்காளம்மன் கோவிலில் கங்கை திரட்டி அம்மன் பூங்கரகம் அலங்கரித்தல் ஆகியவையும், பிற்பகல் 12 மணியளவில் கூழ்வார்த்தல், மாலை 3 மணியளவில் பூங்கரகம் திருவீதி ஊர்வலம், இரவு 9 மணியளவில் கும்பம் படைத்தல் ஆகியவை நடைபெறுகிறது.

திருப்பணி

மேலும் இந்த ஆலயத்தில் சாய்பாபா திருக்கோயில் எழுந்தருள உள்ளதால் கட்டுமான திருப்பணி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆலய நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் கேட்டுக்கொள்கின்றனர்.