டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது .

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, தவான்  களமிறங்கினர்.

பிரித்வி ஷா (5 ரன்) சாஹர் பந்துவீச்சி எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து, சென்னை அணியின் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவான்18, முன்ரோ 27, ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஒரு பக்கம் ரிஷாப் பாண்ட்  அதிரடி காட்டமுடியாமல் நிதானமாக விளையாடினார்.

அக்ஸர் பட்டேலின் விக்கெட்டை பிராவோவும், ரூதர்போர்டின் விக்கெட்டை ஹர்பஜனும் வீழ்த்தினார். ரூதர்போர்டின் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டை எடுத்த 4 -ஆவது வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் பெற்றார். அடித்து ஆட முடியாமல் தவித்து வந்த பண்ட், சாஹர் பந்துவீச்சில் பிரவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 18.4 ஓவர்களுக்கு 137-9 என இருந்தது.

கடைசி ஓவரை வீசிய ஜடேஜாவின் பந்துவீச்சில், போல்ட் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஷர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனபிறகு விளையாடிய  சென்னை அணியின்  வாட்சன், டுபிளிசஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பிறகு அதிரடி ஆடியாக வாட்சன் 31 பாலில் அரைசதம் அடித்து, மிஸ்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு களமிறங்கிய ரெய்னா 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராயுடு மற்றும் தோனி ஆட்டத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின் 19 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சென்னை அணி பைனலுக்கு சென்றது. இதையடுத்து, வரும் 12-ஆம் தேதி இறுதிப்போட்டியில் மும்பையை சென்னை எதிர்கொள்கிறது.