விசாகப்பட்டினம், மே 11: டெல்லியுடனான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வென்றதன் மூலம், சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்ததுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி விசாகப் பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, டெல்லி அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவாண் மற்றும் பிருத்வி ஷா இருவரும் சேர்ந்து 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹார் வீசிய பந்தில் பிருத்வி ஷா அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். பின்னர், களமிறங்கிய தவாண், மன்றோ, கேப்டன் ஸ்ரேயாஸ் என டெல்லியின் முக்கிய தலைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சென்னையின் பவுலிங் அட்டாக்கினால், ஒருவர் கூட சதம் அடிக்கமுடியாமல், டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்து, 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
சென்னை தரப்பில், சஹார், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தஹிர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்கவீரர்கள் டூபிளஸ்ஸிஸ், வாட்சன் ஆகியோர் அரைசதத்துடன் விடைபெற்றனர்.
அடுத்து வந்தவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்ததன் விளைவாக, ஒரு விக்கெட் எஞ்சிய நிலையில், 4 விக்கெட்டுகளை மட்டும் விட்டுகொடுத்து 151 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் 100-வது வெற்றி இதுவாகும்.  ஆதிக்கம் செலுத்தும் மும்பை ஐதராபாத்தில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில், மும்பை அணியை  சென்னை எதிர்கொள்கிறது.  ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பையை தவிர எந்தவொரு அணியிடமும் சென்னை அணி அதிக முறை வீழ்ந்ததில்லை. இவ்விரு அணிகளும் மோதிய 27 ஆட்டங்களில் மும்பை (16-ல் வெற்றி) அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஐபிஎல் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்துவரும் 2 அணிகளும்  (சென்னை, மும்பை) பைனலில் மோதவுள்ளது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், சுவாரஸ் யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  அதேசமயம், நடப்பு தொடரில் லீக் (தாயகத்தில் நடந்த போட்டி உள்பட), பிளே-ஆப் சுற்றுகளில் மும்பையிடம் தோல்வி கண்ட சென்னை அணி, நாளைய போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.