டோக்கியோ, மே 11: உலகிலேயே மிக வேகமாகச்  செல்லும் ஜப்பான் நாட்டு புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  ஜப்பான் ரயில்வே ஆல்பா எக்ஸ் என்ற பெயரில் புதிய புல்லட் ரெயிலை இயக்கவுள்ளது. இந்த ரயிலின் கூர்மையான முன்பகுதி 72 அடி  நீளமாக உள்ளது. காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் செல்ல உதவும் வகையில் இந்த அமைப்பு இருக்கிறது.

பத்து பெட்டிகளுடன் நீண்ட மூக்குப் பகுதி உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  மணிக்கு 4000 கி.மீ வேகம் வரை இந்த ரெயிலை இயக்க முடியும். ஆனால், சோதனை ஓட்டத்தில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை முன்னிட்டு ஜப்பான் பல்வேறு போக்குவரத்து வசதிகளை புதிதாக உருவாக்குகிறது.