செப்டம்பரில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ரிலீஸ்

சினிமா

‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, ரெதான் நிறுவனம் சார்பில் இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இதில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, துளசி, தீபா ராமனுஜம், சென்ராயன், மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரபாகரன் இயக்கி உள்ளார்.

1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.