புதுடெல்லி, மே 11: தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் மக்களவைத் தேர்தல் குறித்து சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தி உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிக்காக அசுதோஷ் சுக்லா  சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தேர்தல் பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் இவரது தலைமையின் கீழ் நடைபெற்றது.

ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் சிபிஐ கேட்டறிந்ததாக தெரிகிறது.