ஆறு கதாநாயகிகளிடம் சிக்கிய ஒரு கதாநாயகன் ‘7’

சினிமா

சுட்டக் கதை, நாய்கள் ஜாக்கிரதை, பலே பலே மக்டிவோய் மற்றும் நேனு லோக்கல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘செவன்’.
இதில் ரஹ்மான், ரெஜினா, நந்திதா, அனிஷா அம்ரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னாட் ஆகியோர் நடித்துள்ளனர். சைத்தன் பரத்வாஜ் இசையமைக்க, பிரவின் கே.எல். படத்தொகுப்பை மேற்கொள்ளார். பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல்களை எழுதியுள்ளார். ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

புதுமுக நடிகர் ஹவிஷ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் படத்தில் வருவதுபோல் வயதான் ஒருவரின் வயது குறைவதுபோல், இப்படத்தில் கதாநாயகனுக்கு இருவேறு வயதுடையவர்களாக வருவது போல் அமைந்துள்ளது. இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.