ஸ்பீரே அடித்து பெண்ணிடம் 5சவரன் திருடியவருக்கு வலை

குற்றம் சென்னை

சென்னை, மே 11: மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 5 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெரவல்லூர் ஜவஹர் நகரை  சேர்ந்தவர் திவ்யா (வயது20) இவரது கணவர் கணேஷ் (வயது23).இவர்களுடன் திவ்யாவின் பாட்டி, அம்மா வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று கணேஷ் தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு கணவன் வந்து விட்டார் என நினைத்து கதவை திறந்தார் திவ்யா. அப்போது முகமூடி அணிந்த நபர் திவ்யாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து, அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் பெரவல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி  ஆசாமியை தேடி வருகின்றனர்.