திருத்தணி, மே 11:  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் வியாழன் இரவு அரக்கோணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக டிராக்டர் ஓட்டி வந்த வெங்கடேசன் (வயது40) என்பவரை காவல் உதவி ஆய்வாளர் நிறுத்துமாறு கூறினார்.ஆனால் நிற்காமல் சென்றதால் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.இது தொடர்ந்து டிராக்டரை போலீசார் கொண்டு செல்லும்போது வாசு(வயது 56), அவரது மகன் சசிதரன் (வயது20) மற்றும் தாஸ்(வயது40) ஆகியோர் போலீசாரை தரக்குறைவாக பேசியும் தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து எஸ் ஐ கொடுத்த புகார் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்ஐயை தாக்கிய 4பேரையும் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.