புதுவை வெங்கட்டா நகரில் மறு ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு

சென்னை தமிழ்நாடு

புதுச்சேரி, மே 11: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம்18ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் காமராஜர் நகர் தொகுதியில் வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மைய வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய சில மணி நேரம் ஆன பிறகு மாதிரி வாக்குப்பதிவு களை அழைக்காமல் வாக்குப்பதிவு நடத்தியது தெரியவந்தது.இதனால் அங்கு குளறுபடி ஏற்பட்டதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெங்கட் ராம் நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆகியோர் நாளை தேர்தல் நடக்க உள்ள வாக்குச்சாவடியில் இன்று ஆய்வு செய்தனர்.