தும்பூர் நாகம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆன்மீகம்

விழுப்புரம், மே 11:  விக்கிரவாண்டியை அடுத்த தும்பூர் நாகம்மன் கோவிலில் சித்திரை நான்காம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 6 மணிக்கு நாகம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழவகைகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம், கோவில் தக்கார் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.