விழுப்புரம், மே11: விழுப்புரம் மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.48 லட்சத்தை எட்டியுள்ளது. அங்காளம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

இதில் 47,91,166 ரூபாயும், 302 கிராம் தங்க நகைகளும், 910 கிராம் வெள்ளி பொருட்களும் உண்டியலில் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியின்போது அறங் காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்ப ழகன் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.