ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்

தமிழ்நாடு

திருச்சி,மே 11: திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.இதற்கு பக்தர்கள் எதிர்ப்புதெரிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்திருந்தது. இந்த கோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக. ரெயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்ததால் இக்கோவில் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கிடையே ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருப்பதாகவும், அதனை அகற்றிடவும், அந்த இடத்தில் மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரி கள், கோவில் நிர்வாகத்தினருக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினர்.

இதுகுறித்து கோவிலை நிர்வகித்து வந்தவர்களும், இந்து அமைப்பினரும் கோவிலை இடிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தன. மேலும்மாற்றும்இடம் தருமாறு கோரினார்.எதையும் கண்டுகொள்ளாத நிர்வாகம் இந்த நிலையில் நேற்று காலை கோவில் முன்பு கண்டோன்மெண்ட் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை, விநாயகர், நாகம்மாள் உள்பட 13 சிலைகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டன. அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில், சுற்றுச்சுவர் உள்பட அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. கோவிலை இடித்து அகற்றும் போது அங்கிருந்த பக்தர்கள்எதிர்ப்புதெரிவித்தனர். மேலும் கோவில் வளாகத்தில்போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.