இவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம்

விளையாட்டு

விசாகப்பட்டினம், மே 11: நேற்றைய போட்டி மட்டுமல்லாது, நடப்பு தொடர் முழுவதுமே இவர்கள் இல்லாமல் சென்னை அணி வெற்றி பெற்றிருக்க முடியாது என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது சென்னை அணி.
இந்த வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில், இன்றைய போட்டியில் ஸ்பின்னர்கள் தங்களது அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டனர்.

இன்றைய போட்டியில் மட்டுமல்ல இந்த தொடர் முழுவதும் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை ரசிகர்கள் அனைவரும் கண்டிருப்பர். இந்த சீசனில் உடல் தகுதி குறித்து மிக கவனமுடன் செயல்பட்டோம்.

சில வீரர்கள் காயம் ஏற்பட்டு விலகியிருந்தாலும், மற்ற வீரர்கள் காயம் ஏற்படுவதற்கு முன்னமே பல முன்னேற்பாடுகளை செய்து அவர்களை உரிய தகுதியுடன் இருக்க வைக்க அணி நிர்வாகம் மிகவும் உதவியாக இருந்தது. 35 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் தொடர்ந்து 40 முதல் 45 நாட்கள் ஒரே நிலையில் கவனமுடன் சிறப்பாக செயல்பட்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. அணியின் வெற்றிக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க முடியும், என்றார்.