விசாகப்பட்டினம், மே 11: சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் தனது 150 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
டெல்லியுடனான நேற்றைய போட்டியில் ஹர்பஜன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், 150 விக்கெட்டுகளை கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.

நேற்றைய போட்டிக்கு முன்பாக ஐபிஎல் அரங்கில் 148 விக்கெட் கைப்பற்றியிருந்த சென்னை வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி வீரர் ஷிகர் தவான், ரூதர்போர்டுவை வெளியேற்றி இந்த சாதனை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை கொல்கத்தா வீரர் ப்யூஸ் சாவ்லாவுடன் ஹர்பஜன் பகிர்ந்து கொண்டார்.