கெடுக்கும் கார்பைடு, இனிப்பான எச்சரிக்கை

சென்னை

முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ சீசன்  சென்னையில் தொடங்கிவிட்டது. கோயம்பேடு சந்தை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை சூடுபிடித்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் மாம்பழம் சுவைப்பதற்கு ஏற்றது. இதில் மருத்துவ குணங்களும், அதே சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குணங்களும் உள்ளன.

ஊட்டச்சத்து நிபுணர்களால் வரையறுக்கப்பட்டபடி இயற்கையாக பழுத்த (165 கிராம் எடை) மாம்பழத்தில் உள்ள
சத்துக்கள் விவரம் வருமாறு:-

கலோரி – 99, புரோட்டின்-1.4 கிராம், கொழுப்பு-0.6கி, நார்ச்சத்து-2.6கி, தாமிரம்-20% (அனுமதிக்கப்பட்ட அளவில்), வைட்டமின் ஏ-10%, வைட்டமின் இ-9.7%, பொட்டாசியம்-6%, மக்னீசியம்-4%,  ஊட்டச்சத்து நிபுணர்களின் கணிப்பு படி 165 கிராம் எடைக்கொண்ட மாம்பழத்தில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் 70% அடங்கியுள்ளது. இதில், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாம்பழத்தை அதிகளவில் சாப்பிடுவோருக்கு கேடுகளும் ஏற்படுகின்றன. பொதுவாக, இதில் சர்க்கரை அதிகம் அடங்கியிருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். கலோரி அதிகம் கொண்டது இல்லை என்றபோதிலும், அதிக எடை உள்ளவர்கள் மாம்பழம் உட்கொண்டால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும். நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 மாம்பழங்களுக்கு மேல் உட்கொள்பவர்கள் வயிற்றுப்போக்குக்கு ஆளாக நேரிடும்.

நமது உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, உபாதைகள் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அதிகம் உட்கொண்டால் வாயு தொல்லைக்கும் ஆளாக நேரிடும். பொதுவாக, இரவில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.  மாம்பழம் உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு மது வகை மற்றும் பால் அருந்தக்கூடாது என
ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர். கீழ்க்கண்ட மாம்பழ வகைகள் மிகவும் பிரபலமா னவைகளாக உள்ளன.

அல்போன்சா – இந்த வகை மாம்பழம் மஹாராஷ் டிராவில் அதிகளவில் உற்பத்தி யாகிறது, படாமி – கர்நாடகத்தில் விளைவிக்கப்படுகிறது, லாங்கரா – உ.பி-யிலும், கேசா வகை குஜராத்திலும் அதிகமாக உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட ங்களில் மல்கோவா, நீலம், பங்கனபள்ளி போன்ற வகைகள் அதிகம் விளைகிறது.

இப்போதைய சந்தை நிலவரப்படி அல்போன்சா கிலோ ரூ.150-க்கும், சிந்தூரா கிலோ ரூ.90-க்கும், பங்கனபள்ளி கிலோ ரூ.100-க்கும் விற்பனையாகிறது.
இது தவிர, ஆர்கானிக் எனப்படும் இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் கிலோ ரூ. 350 வரை விற்கப்படுகிறது.