நங்கநல்லூர் மார்கெட் 4-வது பிரதான சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றதையொட்டி ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஜுன் 4-ம் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஆன்மீக கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12.5.2019 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஏகதின அகண்ட ருத்ரஜபம் நடைபெற உள்ளது. 13-ம் தேதி மகாருத்ர ஏற்பாடு 19-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாபெரியவா ஜெயந்தி விழா, ஆவந்தி ஹோமமும், மாலை 6 மணிக்கு சுவாமி படம் ஊர்வலமும் நடைபெறும். மாலை 7.30 மணிக்கு நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் உபன்யாசம் நடைபெற உள்ளது.

22, 23, 24 ஆகிய தேதிகளில் மாலை 2 மணி முதல் 6 மணி வரை பாராயணம், 300 கனபாடிகள் நிகழ்ச்சியும், 31-ம் தேதி மாலை 7 மணிக்கு நடனநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஜுன் 1,2,3 ஆகிய நாட்களுக்கான நிகழ்ச்சிகள் பின்னர் அறிவிக்கப்படும்.