மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் ஆலயத்தில் கடந்த 8.5.2019 புதன்கிழமையன்று வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீவினைதீர்த்த விநாயகருக்கு காலை 8 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு நடைபெற்றது.

4.5.2019 முதல் 29.5.2019 வரை அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் சுவாமிக்கு தினமும் காலை 10 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆலய அர்ச்சகரை அணுகலாம்.