திருச்சி, மே 12: துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5.63 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த ராஜா என்பவரிடம் வான் நுண்ணறிவு சிங்கத்துறையினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதும், அதனை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து திருச்சி வழியாக விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அதன் படி இன்று அதிகாலை துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது சென்னையை யைச் சேர்ந்த ராஜா (வயது 42) என்பவர் தான் கொண்டுவந்த லேப்டாப் சார்ஜரில் ரூ 5.64 லட்சம் மதிப்புள்ள 176 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே தங்கம் கடத்தலில் பலர் குருவியாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.