சென்னை, மே 12: சென்னை நெற்குன்றத்தைச்  சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் தனது உறவினர் வீட்டில் தங்கி எலெக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை நெற்குன்றம் ஜெயலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் எலெக்ட்ரிகல் வேலை செய்துவந்த தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.