ஆந்திரா – தெலுங்கானாவில் விபத்து : 28 பேர் பலி

இந்தியா

கர்னூல், மே 12: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கர்னூல் மாவட்டம் வெல்துர்தி கிராஸ் ரோடு அருகே ஹைதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து டிரைவர் பேருந்தை திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குண்டக்கல்லில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் ஒன்றிற்கு சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. இதில் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 15 பேர் மரணம் அடைந்தனர்.