சென்னை, மே 12: கண்ணகி நகரைச் சேர்ந்த சேகர் (வயது 25), அரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 29), அஜித்குமார் (வயது 24), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 23) மற்றும் கவாஸ்கர் (வயது 34). இவர்கள் 5 பேரும் ஏற்கனவே கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர வின் பேரில் 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர்.