விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை

சென்னை, மே 12: சென்னையில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை காலை முதல் விசைத்தறிகள் இயங்கும் என்று தொழிற் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.