தெலுங்கிலும் கால் பதித்த வாணி போஜன்

சினிமா

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நுழையும் நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கரை தொடர்ந்து வாணி போஜன் சேர்ந்துள்ளார்.

சன்டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் சத்யாவாக ரசிகர்களிடம் அறியப்பட்டார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்த இவர் நித்தின் சத்யா தயாரிக்கும் புதிய படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவாரகொண்டாவின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பில்லி சுப்புடு படத்தை இயக்கிய தருண் பாஸ்கரன் இயக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் இளம் தெலுங்கு ஹீரோ நாயகனாக நடிக்கிறார்.