புதுடெல்லி, மே 12: 6-ம் கட்ட வாக்குப்பதிவில் 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

இந்நிலையில், 6ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம், அரியானா, பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெற்று வரும் 6ம் கட்ட வாக்குப்பதிவில் பகல் 2 மணி நிலவரப்படி 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பீகாரில் 35.22, அரியானா 39.16, மத்திய பிரதேசம் 42.27, உத்திரபிரதேசம் 34.30, மேற்குவங்கம் 55.77, ஜார்கண்ட் 47.16, டெல்லி 33.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.