விழுப்புரம்,மே 12:  விழுப்புரம் அடுத்த சேர்ந்தனூர் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 8 மணி முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு கோவில் வளாகத்தில் தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.