800 இடங்களில் குடிநீர் வழங்கும் ஏடிஎம்கள்

சென்னை

சென்னை, மே 12: பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி 800 இடங்களில் குறைந்த விலையில் தண்ணீர் வழங்கும் ஏடிஎம் நிலையங் களை திறக்க உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டதால் தற்போது வீராணம் ஏரியில் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. லாரிகள் மூலமும் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தண்ணீர் ஏடிஎம் நிலையங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 800 இடங் களில் இந்த தண்ணீர் ஏடிஎம்கள் அமைக்கப்படும். இநத ஏடிஎம்களில் 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிஎம் மையங்கள் பொதுத் துறை மற்றும் தனியார்துறை பங் களிப்புடன் நிறுவப்படும். 250 சதுர அடி பரப்பளவில் இந்த மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் 4 நிலையங்களை அமைப்பதன் மூலம் சுமார் 10 லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் வழங்குவதற்கு பொறுப்பேற்றுக்கொள்வார்கள். 20 லிட்டர் தண்ணீரை 7 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்.

புறநகர் பகுதிகளில் தாம்பரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் இதுபோன்ற தண்ணீர் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஏற்கனவே சென்னையில் 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங் கள் அமைக்கப்பட்டு குடும்பத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது.