புதுடெல்லி,மே.12: நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் டெல்லியில் 111 வயது டைய மிக முதிர்ந்த வாக்காளரான பச்சன் சிங் காரில் வந்து வாக்கு செலுத்தினார்.

டெல்லியில் மிக வயது முதிர்ந்த வாக்காளரான பச்சன் சிங் இன்று தனது வாக்கினை செலுத்தினார். கடந்த 1951ம் ஆண்டில் இருந்து எந்த தேர்தலையும் தவறவிடாத பச்சன், கடந்த தேர்தலின்பொழுது சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார்.

இந்த முறை தேர்தல் அதிகாரி களுடன் காரில் வந்து இறங்கினார். இதன்பின் அவர் சக்கர நாற்காலியில் வாக்கு மையத்திற்குள் சென்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவரால் சரிவர பேச முடிவதில்லை.

வாக்கு செலுத்தியபின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்களுக்காக பணி செய்பவர்களுக்கு நான் வாக்களித்து வருகிறேன் என கூறினார்.